ஆன்மிகம்

கோலாகலமாக துவங்கியது ஸ்ரீ அத்தி வரதர் தரிசனம்

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீ அத்தி வரதர் வைபவம், கோலாகலமாக துவங்கியது. குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரத பெருமாளுக்கு ஜல சம்ப்ரோக்‌ஷணம், புண்ணியாவதன ஹோமம் ஆகியவை நேற்று நடத்தப்பட்டது. ஸ்ரீ அத்தி வரதர், பக்தர்கள் தரிசிக்கும் வகையில் திருக்கோயிலின் வசந்த மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு ஸ்ரீ அத்தி வரத பெருமாள் 48 நாட்கள் அருள்பாலிக்க உள்ளார். ஜூலை 1 முதல் முதல் 23 வரை சயன கோலத்திலும், ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 17 வரை 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி தர உள்ளார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று அதிகாலை முதல் வரிசையில் நின்று, கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய, அத்தி வரதரை தரிசித்தனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT