ஆன்மிகம்

மாயூரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் - புகைப்படங்கள் 

DIN
18 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மாயூரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்.
18 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மாயூரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் விமான கலசத்தில் புனிதநீர் வார்த்து நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பெரிய கோயில் என்று மயிலாடுதுறை பக்தர்களால் அழைக்கப்படும் அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் கோயில் பழைமைவாய்ந்த, கிழக்கு நோக்கிய 9 நிலை கொண்ட 160 அடி உயர ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் ஆகும்.
சிறப்புகள் பல வாயந்த இக்கோயிலில் கடைசியாக 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு மிகத் தொன்மை வாய்ந்த பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மாயூரநாதர் கோயில்.
கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இவ்வாலயம் தேவாரப் பாடல், சமயகுறவர்களால் பாடல் பாடப்பட்ட ஸ்தலமாகும்.
அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்து மயில் உரு நீங்கி சாபவிமோசனம் அடைந்ததாக இந்த திருத்தலத்தின் புராணம் கூறுகிறது.
160 அடி உயரத்தில் ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் அமையப்பெற்ற கோயிலாகும்.
ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகளின் சீரிய முயற்சியால் ஆலயம் முழுவதும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டு திருப்பணி வேலைகள் நிறைவடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும்!

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

முதல் காலாண்டில் சாம்சங்கின் பங்குகள் 13% சரிவு, ஐபோன் 19% உயர்வு!

ராஜஸ்தான்: சுரங்க விபத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு!

அமராவதி!

SCROLL FOR NEXT