நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளான இன்று பெங்களூருவில் உள்ள அல்சூர் ஏரியில் துர்கா தேவியின் சிலைகளை கரைக்க ஊர்வலமாக வந்த பெங்காலி சமூகத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் ஒன்று கூடி நடனமாடி மகிழ்ந்தனர்.
கொல்கத்தாவில் 'துர்கா பூஜை' திருவிழாவின் முடிவைக் குறிக்கும் வகையில் கங்கை ஆற்றின் கரையில் துர்கா தேவியின் சிலையை எடுத்து வரும் பக்தர்கள்.மேற்கு வங்கத்தில், பிர்பும் மாவட்டத்தில் துர்கா தேவியின் சிலையை கரைக்க ஆற்றின் கரைக்கு வரும் பக்தர்கள்.மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் இந்துக் கடவுளான துர்கா தேவியின் சிலையை கரைக்க எடுத்து வரும் பக்தர்கள்.புதுதில்லியில், 'துர்கா பூஜை' திருவிழாவின் இறுதி நாளென்று, தேவியின் சிலையை ஆற்றில் கரைக்கும் பக்தர்கள்.குருகிராமில், திருவிழாவின் இறுதி நாளென்று நீரில் கரைக்கப்படும் துர்கா தேவியின் சிலை.சிறப்பு வழிபாடு நடந்து முடிந்த நிலையில், ஆற்றில் கரைக்கப்பட்ட துர்கா தேவியின் பிரமாண்ட சிலை.பிரம்மபுத்திரா நதியில் கரைக்கப்பட்ட துர்கா தேவியின் சிலை.பாட்னாவில் துர்கா பூஜை திருவிழாவின் இறுதி நாளென்று ஆறுகள் மற்றும் ஏரிகளில் கரைக்கப்படும் துர்கா தேவியின் சிலை.