மதுரையில் நடராஜன் – வைத்தீஸ்வரி ஆகியோருக்கு மகனாக 1960ல் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தார்.
சிரிப்பு என்ற மருந்தை அள்ளித் தெறிக்கும் நகைச்சுவை நாயகன்.பல இயக்குநர்களின் படங்களின் நகைச்சுவை நாயகனாவும், கதாநாயகர்களின் நண்பனாக வடிவேலுவையே திரையுலகம் தேர்வு செய்தது.1988ஆம் ஆண்டு டி.ராஜேந்தரின் 'என் தங்கை கல்யாணி' படத்தில் மூலம் அறிமுகமானார்.காமெடி ஜோடியான கவுண்டமணி - செந்தி உடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.1994ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் காதலன் படத்தில் வடிவேலு சோலோ காமெடியனாக அறிமுகமானார்.மக்களை சிரிக்கவைத்த இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி.நாய்சேகர், வக்கீல் வண்டுமுருகன், சங்கிமங்கி, டெலக்ஸ் பாண்டியன், செட்டப் செல்லப்பா, ஏட்டு ஏகாம்பரம், கைப்புள்ள போன்ற பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.இயக்குநர் சுராஜ் உடன் இணைந்து தனது 61வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் வடிவேலு.