நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா
படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, கமல் சந்திப்பு - புகைப்படங்கள்
கமல்ஹாசனின் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பும் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் வெவ்வேறு தளத்தில் நடைபெற்றது. திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும், அன்பும், படப்பிடிப்பில் இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
DIN
உச்ச நட்சத்திரங்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.கமல்ஹாசனைக் கண்ட ரஜினிகாந்த் மகிழ்ச்சியில் கட்டித்தழுவிக் கொண்டார்.ரஜினிகாந்த் 'தலைவர் 170' படத்தில் நடித்து வரும் நிலையில், கமல்ஹாசனும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படங்களையம் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.