பல சமயங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அல்லது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்கள் திடீரென கைவிடப்படும். அவ்வகையில் நடிகர் அஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்களைக் காண்போம் 
மற்றவை

அஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்!

DIN
சாருமதி (1997): அஜித்தால் பாதி படப்பிடிப்பில் திடீரென கைவிடப்பட்ட முதல் படம் இதுதான். ஆனால், அதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார்.
நேருக்குநேர் (1997): ராஜாவின் பார்வையிலே (1995) படத்தை தொடர்ந்து அஜித், விஜய் இணைந்த 2-ஆவது படம். சில காட்சிகளில் நடித்த நிலையில் கால்ஷீட் பிரச்னையால் விலகினார் அஜித்.
நியூ (2000): அஜித், ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு, 2000-ஆம் ஆண்டு ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிடப்பட்டு இருவரும் திடீரென விலகினர். சிம்ரன் ஜோடியாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவே நடித்து 2004-ல் வெளியானது.
நந்தா (2001): 1999-ல் சேது வெற்றியைத் தொடர்ந்து 2001-ல் நந்தா படத்தை அறிவித்தார் இயக்குநர் பாலா. முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால், அடையாளம் தெரியாத காரணத்தால் பின்னர் சூர்யா நடித்தார்.
இதிகாசம் (2001): சிடிசன் வெற்றியையடுத்து சரவண சுப்பையாவுடன் மீண்டும் இணைந்தார் அஜித். வரலாற்றுப் பின்னணியில் இதிகாசம் எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இந்தப் படம் முற்றிலும் கைவிடப்பட்டது.
ஏறுமுகம் (2001): சரணுடன் 3-ஆவது முறையாக இணைந்து, 40 சதவீத காட்சிகளும் படமாக்கப்பட்டு, கதையில் திருப்தி இல்லையென்று கூறி விலகினார் அஜித். பின்னர் விக்ரம் நடிப்பில் ஜெமினியாக வெளியாகி வெற்றிபெற்றது.
மகா (2002): போலீஸ் அதிகாரியாக த்ரில்லர் வகையான இந்த கதையின் படப்பிடிப்பு 8 நாட்கள் நடந்தது. அப்போது அஜித் காலில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வர சில காலம் ஆகும் என்பதால் படம் கைவிடப்பட்டது.
திருடா (2004): மருத்துவர் வேடத்தில் அஜித் பங்கேற்று சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்னர் இந்தப் படமும் கைவிடப்பட்டது. பின்னர் இதே கூட்டணி ஜனா திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது.
காங்கேயன் (2006): வரலாறு வெற்றியை தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், அஜித் கூட்டணி மீண்டும் காங்கேயம் படத்துக்காக இணைந்தது. போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால் சில வாரங்களில் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
நான் கடவுள் (2004): பாலாவுடன் மீண்டும் இணைய ஒரு வாய்ப்பாக அமைந்தது. 150 நாள் கால்ஷீட் வழங்கி ஒப்பந்தமானார். பாலா, அஜித்துக்கு மட்டுமே தெரிந்த காரணத்தால் 2006-ல் இந்தப் படத்திலிருந்து விலகினார் அஜித்.
மிரட்டல் (2004): ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணைந்தார் அஜித். ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ஆனால், மொட்டை அடிக்க வேண்டும் என்பதால் இதிலிருந்தும் விலகினார் அஜித். கஜினியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹௌராவில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உடல் கருகி பலி!

ஒளி பிறக்கும், அது வழிநடத்தும்! கிறிஸ்துமஸ் விழாவில் விஜய்!

பணிமூப்பு அடிப்படையில் முதலில் 723 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் பேட்டி

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டம் ரத்து: கிராமப்புற வாழ்வாதாரத்திற்குப் பேரழிவு - சோனியா

”தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர்! நயினார் நாகேந்திரன் பேட்டி | BJP

SCROLL FOR NEXT