முகப்பு
நிகழ்வுகள்

சென்னையில் மீண்டும் 'பஸ் டே' கொண்டாட்டம் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
சென்னையில் பஸ் டே எனப்படும் பேருந்து தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் 'பஸ் டே' கொண்டாட்டத்துக்குரிய பேனர்களை பிடித்தபடி நிற்கும் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள்.
பகிர்:
கோயம்பேட்டிலிருந்து பிராட்வே செல்லக்கூடிய பேருந்து கூரை மீது ஏறி 'பஸ் டே' கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்.
கல்லூரி தொடங்கியதையொட்டி பஸ் டே கொண்டாடிய மாணவர்கள்.
பஸ் டே முன்னிட்டு பேருந்துக்கு மாலை அணிவித்தும் பேருந்து மீது ஏறி கூச்சலிட்டு, போக்குவரத்துக்கு இடையூறாகவும் செயல்படும் கல்லூரி மாணவர்கள்.
காவல் துறையினர் பலமுறை கண்டித்தும் மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பேருந்து கூரையின் முன் பகுதியில் நின்று கொண்டு அதன் ஆபத்தை உணராமல் பயணிக்கும் மாணவர்கள்.
பேருந்து தினம் கொண்டாடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி அவ்வப்போது 'பஸ் டே' கொண்டாடும் மாணவர்கள்.
2012ஆம் ஆண்டு சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது என்பது குறிப்படத்தக்கது.
முழு கட்டுரையைப் படிக்க →