ஹைதராபாத்தில் ரங்கோலி கலைஞரான பிரமோத் சாஹுவால் பல வண்ணங்களைக் கொண்டு, மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உருவத்தை ஓவியமாகத் தீட்டியுள்ளனர்.
நாசிக் மாவட்டத்தில் வசிக்கும் ப்ரமோத், கலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.ஓவியம் தத்ரூபமாக உள்ளதால் பார்ப்பவர்கள் கண்களைக் கவர்ந்துள்ளது.இவரது ரங்கோலியைக் காண மக்கள் பல பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்றனர்.இவரது ரங்கோலி சமூக ஊடகங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.தனது இனிய குரலால் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி திரையிசையுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம்.‘பாடும் நிலா பாலு’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ஓவியம்.“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்” என்று பாடிய 'பாடும் நிலா பாலு'.