நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் முழு முதற் கடவுளான ஆனை முகத்தானின் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நகர் முழுவதும் களை கட்டி உள்ளது. - Kunal Patil
பகிர்:
மும்பையில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை எடுத்து வரும் பக்தர்கள்.சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலையை பல்வேறு இடங்களில் நிறுவ எடுத்து வரும் பக்தர்கள்.அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக விநாயகர் சிலையை எடுத்து வரும் பக்தர்கள்.சதுர்த்தி முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.விநாயகர் சிலைகள் சிற்ப கலைக்கூடங்களிலிருந்து இன்னிசை வாத்தியங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு வரும் பக்தர்கள்.விநாயகர் சதுர்த்தியையொட்டி விழா கோலம் பூண்ட மும்பை மாநகரம்.விநாயகர் சதுர்த்தியையொட்டி தங்களுக்குப் பிடித்தமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் எடுத்து வரும் பக்தர்கள்.தனது வீட்டின் ஜன்னல் வழியாக விநாயகர் சிலையை கண்டு களிக்கும் குழந்தைகள்.சதுர்த்தி விழாவிற்காக பருப்பு வகைகளால் ஆன விநாயகர் சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் கலைஞர்.மும்பையில் தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் விநாயகர் சிலைகளை நிறுவி வருகின்றனர்.