முகப்பு
செய்திகள்

கொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குரு ஸ்தலமான சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி மற்றும் சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது. புகாரின் பேரில்  3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி அருகில் உள்ள கல்யாணிபட்டி பிரிவில் உள்ள ஒரு தோட்டத்தில் 4 சிலைகளும் போலீஸார்  மீட்டனர். மீட்கப்பட்ட சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் ஐம்பொன் சிலைகளை பார்வையிடுகிறார் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →