கடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருட்டி பாறையை பார்த்த பிறகு, ஐந்து ரதம் பகுதியை சுற்றிப்பார்த்தனர், பிறகு கடற்கரை கோவில் பகுதிக்கு சென்றனர். அப்போது குடைவரை கோவில்களின் தொன்மைகள் குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இதையடுத்து, கடற்கரை கோவில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசித்தனர்.