துபாயிலிருந்து கேரளாவுக்கு 191 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் இறங்கிய போது விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானம் இரண்டாக பிளந்தது.
பகிர்:
விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 பைலட்டுகள் மற்றும் 5 விமானக் குழுவினர் இருந்துள்ளனர்.கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியை ஏர் இந்தியா நிறுவனம், வந்தே பாரத் என்னும் பெயரில் செய்து கொண்டிருக்கிறது.ஓடுதளத்தில் இறங்கிய போது ஓடுபாதையைவிட்டு விலகிய விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது.மீட்புப் நடவடிக்கைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.ஓடுதளத்தில் இறங்கிய போது விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானம் இரண்டாக பிளந்தது.தொடர்ந்து மீட்புப் பணிகளும் நடந்து வருகின்றன.விபத்துக்குள்ளான விமானம்.மீட்டுப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்த விபத்தில் விமானி, துணை விமானி பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.