தமிழகம், புதுச்சேரியில் புதிய பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம்
தமிழகம், புதுச்சேரியில் புதிய பாடத் திட்டத்தில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 2 (திங்கள்கிழமை) முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சோ்ந்த 8 லட்சத்து 16,359 மாணவா்கள் மற்றும் 19,166 தனித்தோ்வா்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 போ் எழுத உள்ளனா். இவா்களில் 4 லட்சத்து 41,612 மாணவிகள், 3 லட்சத்து 74,747 மாணவா்கள், 2 திருநங்கைகள், 62 சிறைக் கைதிகள் அடங்குவா்.