சென்னை, புறநகர் பகுதிகளில் கன மழை - புகைப்படங்கள்
கன மழையால் சென்னை அயனாவரம் சபாபதி தெருவின் அவல நிலை.
மழை விடாமல் பெய்ததால் அயனாவாரம் சபாபதி சாலையில் தேங்கிய மழை நீரில் நடந்து செல்லும் பொது மக்கள்.
மழைக்கு மத்தியில், பொங்கல் தொகுப்பை வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.
சென்னை வில்லிவாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் நடந்து வரும் பெண்.
கன மழையால் இடுப்பு அளவில் தேங்கிய மழை நீரில், வாகனம் பழுதான நிலையில் நடந்து வரும் வாகன ஓட்டி.
வியாசர்பாடி ஜீவா பாலம் வழியாக தனது சைக்கிளுடன் மார்பளவு தண்ணீரில் நடந்து வரும் சிறுவன்.
வியாசர்பாடி ஜீவா பாலம் வழியாக தனது பைக்கை மழை நீரில் தள்ளிக்கொண்டு வரும் நபர்.
பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஜமாலியா பகுதியில் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
கன மழையில் குடையுடன் நடந்து வரும் நபர்.
கொட்டும் மழையில் நடந்து வரும் நபர்.
கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சென்னை மாநகர் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இருள் சூழ்ந்து இருந்ததால், அனைத்து வாகனங்களும் விளக்குகளை எரிய விட்டுக்கொண்டே சென்றன.
பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் சாலை வெள்ளக்காடானது.
மழை நாள்களில் ஏழை மக்களின் அவல நிலை.
மழையில் குடையைப் பிடித்து வேடிக்கை பார்க்கும் சிறுவன்.
தீவுத்திடல் அருகே கூவம் கரையோரத்திலுள்ள வீடுகளை இழந்த நிலையில் மழையின் பிடியின் சிக்கியுள்ள மக்கள்.
மழையின் பிடியில் சிக்கிய மூதாட்டி.
வீடுகளை இழந்த நிலையில் கூடாரத்தில் வசிக்கும் காந்தி நகர் மக்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.