மழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இடம்: அண்ணா நகர் 5வது அவென்யூ
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
சிறிய மழை பெய்தால் கூட சாலைகள் குண்டும், குழியுமாக மாறி, வாகனங்களில் செல்ல முடியாத நிலையில் மக்கள் அவதி.தொடர் மழையால் சேதமடைந்து குளம் போல் தேங்கிய மழைநீர்.
Advertisement
வெளியேறும் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கனமழையால் சேதமடைந்த கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை சாலையில் செல்லும் வாகனங்கள்.பல்வேறு தெருக்கள் பள்ளம், மேடாக காணப்படுவதால், ஆட்டோக்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை. இடம்: அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை
குண்டும், குழியுமான அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள்.பயன்படுத்தவே இயலாத அவல நிலையில் உள்ள சச்சித்தநாதம் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள்.கனமழையால் மிகவும் மோசமான நிலையில் உள்ளன சச்சித்தநாதம் சாலை.
பல இடங்களில் மழைநீர் முழுவதுமாக வடியாமலும், குண்டும் குழியுமாகவும் இருப்பதால், பொதுமக்கள் அவதி.ஓட்டேரியில் பிரதான சாலையான ஸ்ட்ராஹான்ஸ் சாலையின் அவல நிலை.கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் குண்டும், குழியுமான காட்சி தரும் வானகரம் சாலை.
கனமழையால், மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலை.பழுதடைந்த ராஜாஜி சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.