முகப்பு
செய்திகள்

தடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், தமிழகத்தில் 166-மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது.
பகிர்:
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியினை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு தடுப்பூசி செலுத்தும் செவிலியர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த பெரும்பாலான பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மருத்துவமனையில் மருத்துவருக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தும் செவிலியர்.
தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தும் செவிலியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.