அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'பைபிள்' மீது உறுதிமொழி ஏற்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ஜோ பைடன். அருகில் அவரது மனைவி ஜில் பைடன்.
முதல் பெண் துணை அதிபராக பதவியேற்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ்.அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில், அதிக வயதில் அதிபர் பதவியை ஏற்ற பெருமையை பெற்றுள்ளார்.கரோனா பரவலைத் தவிா்ப்பதற்காக, வழக்கமான பெரிய கூட்டம் இல்லாமல் குறைந்த எண்ணிக்கையிலான வருகையாளா்களுடன் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதிபரின் பதவியேற்பு விழாவை, எளிமையாக நடைபெற்றது.அதிபர் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன், புஷ்ஷின் மனைவி லாரா.அதிபர் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.உடன் அவரது மனைவி மிஷெல் ஒபாமா.அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு மனைவி ஜில் பைடன், மகன், மகளுடன் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் ஜோ பைடன். அருகில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்.