ஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்
இரவில் கலை அம்சங்களுடன் காணப்படும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுச்சின்னம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.80 கோடி மதிப்பில், ஃபீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
கட்டுமான பணியை கடந்த 2018ஆம் ஆண்டு முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் வருகிற 27ஆம் தேதியன்று திறக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜெயலலிதா வாழ்ந்து அரசுடமையாக்கப்பட்ட போயஸ் கார்டன் இல்லமும் அன்றைய தினமே பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்படவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.