சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த போது தலைமைசெயலாளர் இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.முதல்வர் ஆய்வு பணிகளை மேற்கொண்ட போது, அமைச்சர்கள் கே. என் நேரு, சேகர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.சென்னையில் வடகிழக்கு பருவமழையையொட்டி விடிய விடிய பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் மாறியது.பொதுமக்கள் தங்கள் குறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பு.விழுந்துள்ள மரங்களை விரைவில் அகற்றி போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.சாலையில் மழை நீரில் இறங்கி ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு.மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போர்வை, பிஸ்கட், பிரெட் அடங்கிய உணவு பொருட்கள் பொட்டலம் வழங்கினார்.ஆய்வுக்கு பிறகு உணவு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.