சென்னை மழை: இரண்டாவது நாளாக முதல்வர் நேரில் ஆய்வு - புகைப்படங்கள்
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் 2வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்புகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மகாகவி பாரதியார் நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவராண பொருட்களை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாயில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை பெரம்பூர், முல்லை நகரில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பிறகு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
அன்னை சத்யா நகரில் மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்புகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை ராயபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் அமச்சர் கே.என். நேரு, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.