கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் கேரளாவில் பரவலாக கனமழை கொட்டி வருகிறது.பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோட்டயம் மாவட்டத்தில் மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.கோட்டயம் மாவட்டத்தில் மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.நிலச்சரி மற்றும் கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அதை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதாலும், உபரிநீர் திறந்து விடப்பட்டதால் சாலைகளில் தேங்கிய மழை நீர்.மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர்.மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் ஈடுபட்டுள்ளனர்.மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கடற்படை மற்றும் ராணுவத்தினர்.