தில்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறி நவீன முறையில் கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டடம் , உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வெடி வைத்து தகர்க்கப்பட்டது. 
செய்திகள்

நொய்டா இரட்டைக் கோபுரம் தகர்ப்பு - புகைப்படங்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில்  விதிகளை மீறி  கட்டப்பட்டுள்ளதாக கூறி இரண்டு கட்டடங்களையும் இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவையடுத்து, எமரால்ட் குடியிருப்பு சங்க இரட்டை கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படுகின்றன.

DIN
விதிமீறிக் கட்டப்பட்ட இரட்டை கோபுரங்கள்.
நொய்டா இரட்டை கோபுரத்தை இடிப்பதற்கான பணி எடிஃபிஸ் இன்ஜினியரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
3,700 கிலோ வெடிபொருட்களை கட்டிடத்தின் தூண்களில் நிரப்பும் பணிகள் முடிவடைந்து 'வாட்டர் ஃபால் இம்ப்ளோஷன்' என்ற தொழில்நுட்பம் மூலம் கட்டடம் தகர்க்கப்பட்டது.
கட்டடம் இடிப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பு கவுன்டன் தொடங்கிய நிலையில், பிற்பகல் 2.30 மணியளவில் கட்டடம் முழுவதும் இடிக்கப்பட்டது.
இரட்டை கோபுரங்கள் அருகில் உள்ள வீடுகளில் ஜன்னல், கதவு, தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
100 மீட்டர் உயரம் கொண்ட ஏபெக்ஸ் கட்டிடம், 97 மீட்டர் உயரம் கொண்ட சியேன் கட்டடம் தகர்க்கப்பட்ட காட்சியை பலர் நேரில் பார்த்தனர்.
சரியாக 9 நொடிகளில் கட்டடம் முற்றிலும் தகர்க்கப்பட்டது.
கட்டடம் தரைமட்டம் ஆனாலும், அதில் இருந்து வெளியேறும் புழுதிப் படலம் முழுவதுமாக அடங்க சிறிது நிமிடங்கள் ஆயின.
தரைமட்டமான இரட்டை கோபுரம்.
கட்டிடத்தின் அருகில் வசிப்போர் வீடுகளில் உள்ள மின் இணைப்பு, கியாஸ் இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது.
கட்டடங்களை இடிப்பதால் ஏற்படவுள்ள தூசுப்படலத்தைக் கருத்தில்கொண்டு, அப்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

வருவாய்த் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உயா்நீதிமன்றம் கேள்வி

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விபத்து

SCROLL FOR NEXT