ராகவா லாரன்ஸ், சரத்குமார் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ருத்ரன்’.
படத்தின் அட்டகாசமான செகண்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கதிரேசன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியானதில் ராகவா லாரன்ஸ் ஒருவனை மிதித்தபடி மாஸ் லுக்கில் வருகிறார்.சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.இணையத்தில் வைரலாகி வரும் ருத்ரன்.ருத்ரன் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.