புதுதில்லியில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கிய சாலைகள். 
செய்திகள்

வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை - புகைப்படங்கள்

புதுதில்லி, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிற நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு.

DIN
புதுதில்லியில் உள்ள காஷ்மீர் கேட் அருகே, யமுனை நதியிலிருந்து பெருக்கெடுத்து வரும் நீர் தாழ்வான பகுதிகளை அடைந்ததால், வெள்ளக்காடான சாலை.
கனமழையால் வெள்ளக்காடான சாலை.
குளம் போல தேங்கிய மழை நீரில் நீந்தி செல்லும் நாய்.
யமுனை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
வெள்ளம் சூழ்ந்த செங்கோட்டை பகுதியில் மேதுவாக செல்லும் ரிக்ஷா வண்டிக்காரர்.
யமுனை ஆற்றிலிருந்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும் நிலையில், குளம் போல மாறிய சாலையைக் கடக்கும் பெண்.
குளம்போல மாறிய சாலை வழியாக நடந்து செல்லும் நபர் ஒருவர்.
ஹரித்வாரில் கனமழைக்கு மத்தியிலும் நீர் தேங்கிய சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்.
பட்ரான் அருகே வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய டிரக் ஓட்டுனரை கயிறு கட்டி பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.
யமுனை நதியில் நீர்மட்டம் அபாய கட்டத்தைக் கடந்து பெருக்கெடுத்து ஓடும் நிலையில் கரையோரப் பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்.
யமுனை நதியின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் கடந்து பெருக்கெடுத்து ஓடும் நிலையில், சுரங்கப்பாதை வழியாக படகில் செல்லும் மக்கள்.
நீர் சூழ்ந்த சாலையில் சுயபடம் எடுத்து கொள்ளம் நபர் ஒருவர்.
வெள்ளம் சூழ்ந்த யமுனா பஜார் பகுதியில் படகில் பயணிக்கும் மக்கள்.
வெள்ளக்காடான யமுனா பஜார்.
ஹரித்வாரில் பக்தர்கள் மேற்கொண்ட யாத்திரையின் போது பாலத்தின் அடியில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.
ஹரித்வாரில் பெய்த கனமழைக்குப் பிறகு வெள்ளக்காடான சாலையில் செல்லும் வாகனங்கள்.
யமுனையில் நீர் வரத்து அதிகரிப்பால் யமுனை ஆற்றைச் சுற்றியுள்ள சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வெள்ளக்காடான சாலையில் பகுதியில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த மாடு.
வெள்ளம் சூழ்ந்த யமுனா பஜார் பகுதியில் வாகனத்தில் மேல் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர்.
வெள்ளக்காடான சாலையில் தனது ரிக்ஷாவில் மேல் உறங்கும் வண்டிக்காரர்.
வெள்ளக்காடான யமுனா பஜார் பகுதியில் நீந்தி கொண்டு வரும் சிறுவன்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்.
குலு மாவட்டத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து சேதமடைந்த சாலை.
கோட்வாரில் இடைவிடாத பெய்த மலையால் மாலன் ஆற்றின் பாலம் சேதமடைந்தது.
கனமழையால் தில்லியில் யமுனை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, சாலைகள் ஆறுகளாக மாறியது.
வாரணாசியில் இந்துக் கடவுளான சிவன் சிலை அருகில் உள்ள கங்கை நதியில் நீந்தும் சிறுவர்கள்.
வெள்ளக்காடான பழைய யமுனா பாலம் அருகே நீரில் சிக்கிய வாகனங்கள்.
ஆக்ராவில் தொடர்ந்து உயர்ந்து வரும் யமுனா நதியின் நீர்மட்டம்.
கார்ஹி மெண்டு கிராமத்தில் பாய்ந்தோடி வரும் யமுனை நதியின் வான்வழி காட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT