சாதனை மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை விருது வழங்கும் விழா, சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் நடிகர் விஜய்.விழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.மேடைக்கு வந்த உடன் உற்சாகமான நடிகர் விஜய்.காலையில் தொடங்கிய இந்த நிகழ்வு மதிய உணவு பிறகு இரவு வரை நடைபெற்றது.மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் ஊக்கத் தொகை வழங்கி கெளரவிப்பு.நடிகர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், ஊக்கத் தொகையையும் வழங்கினார்.மகிழ்ச்சியில் மாணவர்களுடன் நடிகர் விஜய்.சுமார் 1,500 பேர் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அனைவருக்கும் சான்றிதழ்கள் நடிகர் விஜய் வழங்கினார்.