செய்திகள்

விண்ணில் சீறி பாய்ந்த ஆதித்யா எல்-1 விண்கலம் - புகைப்படங்கள்

DIN
பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுன்டவுன் நேற்றே தொடங்கப்பட்டு எரிபொருள் நிரப்பும் பணிகள் அனைத்தும் நிறைவுற்றன.
பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுன்டவுன் நேற்றே தொடங்கப்பட்டு எரிபொருள் நிரப்பும் பணிகள் அனைத்தும் நிறைவுற்றன.
பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்' எனும் பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்.
சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ஆதித்யா மேற்கொள்ளும்.
சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா- எல்1 சுமார் 1,475 கிலோ எடை கொண்டது.
குறிக்கப்பட்ட நேரத்தில் வெற்றிகரமாக விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இதில் சோலார் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட 7 வகையான ஆய்வு கருவிகள் உள்ளன.
ஆதித்யா-எல் 1 அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்தது.
பல்வேறு நாடுகள் சூரியனை ஆய்வு செய்ய விண்கலன்களைச் செலுத்தியுள்ள நிலையில், இந்தியா சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1-ஐ விண்ணில் செலுத்தியது.
இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர்.
ராக்கெட் விண்ணில் பாய்வதை காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT