மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி அருகே இன்று (17-06-24) காலை கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. - ANI
பகிர்:
அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் ரயில் பயணித்துக் கொண்டிருந்தது போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடைபெற்றது.பின்னால் இருந்து சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 3 முதல் 5 பெட்டிகள் வரை சேதமடைந்தன. விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் தடம்புரண்ட ரயில் பெட்டிகள்.சம்பவ இடத்துக்கு சென்று மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.காயமடைந்தவர்கள் பெங்கால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ரயில் விபத்து நடைபெற்ற விபத்தில் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.விபத்து நடந்த பகுதிக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். நியூ ஜல்பைகுரி, சிலிகுரி சந்திப்பு, பாக்டோக்ரா, அளுவாபுரியா வழியாக செல்லக்கூடிய 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மண்டலம் அறிவிப்பு.