சென்னை பட்டாளத்தில் கொட்டும் மழைக்கு நடுவே தண்ணீர் தேங்கிய பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பகிர்:
தொடர் கனமழையால், சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கியுள்ள நிலையில் துப்புரவு தொழிலாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றின் முகத்துவாரத்தை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.சேப்பாக்கம் உள்ளிட்ட வி.பி.ராமன் சாலை மற்றும் அதனை ஒட்டிய தெருக்களில் மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.சென்னை பட்டாளத்தில் மழைக்கு மத்தியில் தண்ணீர் தேங்கிய பகுதியில், தற்காலிக படகில் பயணிக்கும் பொதுமக்கள்.தண்ணீர் தேங்கிய பகுதியில் தற்காலிக படகில் செல்லும் பொதுமக்கள்.மழை நீரில் மூழ்கிய கோயில்.தண்ணீர் தேங்கிய பகுதியை ஆய்வு செய்த பிறகு, சாலையை கடந்து செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கான்வாய்.கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், வேளச்சேரி மேம்பாலத்தில் தங்களுடைய கார்களை நிறுத்தி வைத்துள்ள பொதுமக்கள்.சென்னையில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால், பாலத்தின் இரண்டு புறங்களிலும் பொதுமக்கள் தங்களது கார்களை வரிசையாக நிறுத்தி உள்ளனர்.சென்னையில் கனமழை பெய்து வருவதால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் குடையை பிடித்து கொண்டு செல்லும் பெண்.மழைநீர் தேங்கிய சாலையில் நடந்து செல்லும் இளம் பெண்.தண்ணீர் தேங்கிய சாலையில் பயணிக்கும் பொதுமக்கள்.மழைநீர் தேங்கிய சாலையில் உள்ள வடிகால் அடைப்பை சுத்தம் செய்யும் போலீஸார்.கனமழை காரணமாக தண்ணீர் தேங்கிய பகுதியிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்படும் வயதான பெண்மணி.கனமழை காரணமாக குளம் போல மாறிய சாலை.மழைநீர் தேங்கிய சாலையில் தனது பைக்கில் செல்லும் நபர் ஒருவர்.சென்னையில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில் திணறும் வாகன ஓட்டிகள்.வெள்ளத்தில் மூழ்கியுள்ள சாலையில் நடந்து வரும் பொதுமக்கள்.வெள்ளத்தில் மூழ்கியுள்ள சாலையில் செல்லும் சிறுவர்கள்.