இம்பாலில் அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள்.
இம்பால் பள்ளத்தாக்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் போராட்டம்.மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தடுக்கும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு, இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலும், தவுபால் நகரில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் போராட்டத்தின் போது, கண்ணீர் புகை குண்டுகளை வீசும் பாதுகாப்புப் படையினர்.மாணவர்கள் போராட்டத்தையடுத்து வருகிற 15-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்படுவதாக மாநில நிர்வாகம் அறிவிப்பு.ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.கலவரத்தால் பாதிக்கப்பட்ட இம்பால்.வன்முறையாக மாறிய போராட்டம். இம்பாலில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களை பதிவு செய்யும் ஊடகத் துறையினர்.இம்பால் மேற்கு மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் போது பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள்.