தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா 74 ரன்களில் சுருண்டது.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.ஹார்திக் பாண்டியா 28 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.