நடப்பு கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று (பிப்ரவரி 15) தொடங்ககியது. -
நாடு முழுவதும் 8,000 பள்ளிகளைச் சேர்ந்த 44 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.2025 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் இந்தியா முழுவதும் 7,842 மையங்களில் நடைபெற்றது.விதிமீறல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு.மாணவர்கள் அனுமதி சீட்டு மற்றும் பள்ளியின் அடையாள அட்டையை தேர்வு மையத்துக்கு எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.தனித் தேர்வர்களாக தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு அங்கீகரித்த அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடையும்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்து 12 ஆயிரத்து 72 பேர் எழுதி உள்ளனர்.பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 17 லட்சத்து 88 ஆயிரத்து 165 பேர் என மொத்தமாக 42 லட்சத்து 237 பேர் எழுத உள்ளனர்.தேர்வு முடிந்த நிலையில், உற்சாகமாக வெளியே வந்த மாணவன்.புதுதில்லியில் உள்ள கோல் மார்க்கெட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள்.தேர்வை எழுதிய பிறகு விவாதிக்கும் மாணவிகள்.தேர்வை எழுதிய பிறகு விவாதிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள்.தேர்வு மையங்களில் பாதுகாப்புக்காக உதவி கண்காணிப்பாளர்கள் 2 லட்சத்து 10 ஆயிரத்து 12 பேர் நியமித்து மாணவர்கள் கண்காணிப்பட்டனர்.தனது மகளை அழைத்து செல்ல வந்த தந்தை.