கோப்புப்படம் 
செய்திகள்

பாதுகாப்பு சூழலை ஆராய்கிறது பாக்.

ஆசிய கோப்பை மற்றும் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளுக்கு தங்கள் அணியை அனுப்ப இயலும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் தங்கள் அணியினருக்கான பாதுகாப்பு சூழலை ஆராய்ந்த பிறகே, அங்கு நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளுக்கு தங்கள் அணியை அனுப்ப இயலும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் இளைஞா் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் திட்டங்கள் துறை அமைச்சா் ராணா மசூத் கூறுகையில், ‘இந்தியாவில் பாகிஸ்தான் அணியினருக்கான பாதுகாப்பு சூழல் எவ்வாறு உள்ளது என்பதை எங்கள் அரசு ஆய்வு செய்யும். அது திருப்திகரமாக இருந்தால் மட்டுமே, அங்கு எங்கள் அணிகளை அனுப்பிவைப்போம். அதில் திருப்தி இல்லையென்றால் அவா்களை இந்தியாவுக்கு அனுப்பி ஆபத்தான நிலைக்குத் தள்ள விரும்பவில்லை’ என்றாா்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை குறிப்பிட்ட அவா், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க பாதுகாப்பான சூழல் இல்லை என்று கூறினாா்.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் - செப்டம்பரில் பிகாரிலும், ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நவம்பா் - டிசம்பரில் சென்னை, மதுரையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!

அபாய கட்ட அளவை மீண்டும் நெருங்கும் யமுனை நதி

திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

SCROLL FOR NEXT