புதுதில்லி செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட வெடிப்புக்குப் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. -
தில்லி கார் வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்புப் படைகள் உஷாராக உள்ள நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.தில்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களும் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கார் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் எங்கு பார்த்தாலும், சிதைந்த உடல்களும், சேதமடைந்த வாகனங்களும் காணப்படுகின்றன.தில்லியில் மக்கள் நெரிசல் அதிகம் நிறைந்த பகுதியில் கார் வெடிப்பை தொடர்ந்து, தீப்பற்றி எரியும் கார்.கார் வெடிப்பு நிகழ்ந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.செங்கோட்டை பகுதிக்கு அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் இந்த கார் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.புதுதில்லியில் கார் வெடிப்பு தொடர்ந்து ஒன்று கூடிய பொதுமக்கள்.