மியான்மர் அதிபருடன் மோடி சந்திப்பு
சீனாவைத் தொடர்ந்து அண்டை நாடான மியான்மருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி இரு நாடுகளிடையே உறவை மேம்படுத்துவது தொடர்பாக அதிபர் ஹதின் கியாவ், ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி, காலசாரம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.