காவேரி மருத்துவமனையில் ராகுல் காந்தி
50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்தச் சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் உடனிருந்தார்.