முகப்பு
அரசியல்

தி.மு.க. தலைவராக ஸ்டாலின் தேர்வு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு மு.க.ஸ்டாலினுக்கு, பேராசிரியர் அன்பழகன் சால்வை அணித்து வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து, தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் ஒருமனதாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாக க.அன்பழகன் அறிவித்தார். பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்று மூத்த நிர்வாகிகள் வாழ்த்துரைகளை வழங்கினர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.