முகப்பு
அரசியல்

ஷீலா தீட்சித் காலமானார் - 1938-2019

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தில்லி மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்சித், காலமானார். உடல் நலக் குறைவால் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் மதியம் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. இவர் 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியின் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் தில்லியில் காலமானார். அவளுக்கு வயது 81.
பகிர்:
தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்த தில்லியின் முதல்வராக இருந்து உள்ளார்.
தில்லி பல்கலைக் கழகத்தின் மிராந்தா ஹவுஸ் கல்லூரியில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 'ஸ்டேட்டஸ் ஆப் உமன்' ஆணையத்தில் ஐந்து ஆண்டுகள் (1984-1989) வரை இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தார்.

Advertisement

ராஜீவ்காந்தி ஆட்சிக் காலத்தின் போது, 1984ஆம் ஆண்டில் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சராக 1986-1989ஆம் ஆண்டுகளில் பணியாற்றினார்.
டிசம்பர் 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தன் சொந்தத் தொகுதியில் தோல்வியுற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஷீலா தீட்சித், மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார். பிறகு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
2008-ஆம் ஆண்டில் இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் 'சிறந்த முதல்வர்', 2009-ல் என்.டி.டி.வி வழங்கிய 'ஆண்டின் சிறந்த அரசியல்வாதி' போன்ற பல விருதுகளுடன் அவர் கெளரவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments