முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 
அரசியல்

வாஜ்பாய் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

DIN
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' விருதைப் பெற்றுள்ள வாஜ்பாய், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வாஜ்பாய் நினைவு நாளையொட்டி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பிரதமராக பதவியேற்ற முதல் பாஜக தலைவர் என்ற பெருமைக்குரிய வாஜ்பாய், தனது 93 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
வாஜ்பாய் குடும்பத்தினரும் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தில்லியில் உள்ள அவரது நினைவிடமான 'சதைவ் அடல்' மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 முறை சாம்பியனான ஜெர்மனி உலகக் கோப்பைக்குத் தேர்வு!

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு: மத்திய அரசு!

கோவையில் பிரதமருடன் சந்திப்பு? “அது சஸ்பென்ஸ்! பொறுத்திருந்து பாருங்க!” செங்கோட்டையன் பதில்!

தில்லியில் எஸ்ஐஆருக்கு எதிராக மாபெரும் பேரணி! காங்கிரஸ் அறிவிப்பு

விரைவில் வாட்ஸ்ஆப் கால்களை ஷெட்யூல் செய்யும் வசதி!

SCROLL FOR NEXT