கோவை மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும், ஒரே மேடையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினர்.
தமிழக தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழகத்தில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீகுமார் ஆகியோரை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம்.
Advertisement
Advertisement
இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக ஆதரவையும் திரட்டி வரும் அரசியல் தலைவர்கள்.கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கணபதி ராஜ்குமாா், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஈஸ்வரசாமி, ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் பிரகாஷ் மற்றும் கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.கோவை செட்டிபாளையம் அருகே கோவை - கொச்சி எல்அன்டு டி புறவழிச் சாலையில் பிரசார பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது.
கோவையில் ராகுல் காந்தியும், முதல்வா் மு.க. ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்வதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.தேர்தலுக்கு இன்னும் ஒரே வார காலமே உள்ள நிலையில், பிரசார களம் சூடுபிடித்துள்ளது.தேர்தலுக்கு இன்னும் ஒரே வார காலமே உள்ள நிலையில், தமிழகத்தை நோக்கி தேசிய தலைவர்களும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.