அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார் டொனால்டு டிரம்ப்.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தில் வெற்றி வாகை சூடினார்.இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும் என்றார் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு.மீண்டும் டிரம்ப் வசம் வரும் வெள்ளை மாளிகை.டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து உலக அரங்கின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப்.கடந்த 20 வருடங்களில் குடியரசு கட்சி முதல்முறையாக ஜனநாயக கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது.என்னை நம்பி வாக்களித்த உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்துக்காகவும், உங்கள் எதிர்காலத்துக்காகவும் நான் பாடுபடுவேன்.எனது ஒவ்வொரு நாளும், இனி உங்களுக்காகத்தான், மிக பலம் வாய்ந்த, மகத்தான நாடாக அமெரிக்க மாறும்வரை நான் ஓய்வெடுக்கவே மாட்டேன் என்று சூளுரைத்த டிரம்ப்.போட்டி, துப்பாக்கிச்சூடு என பல நெருக்கடிகளுக்கு இடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.