சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. R Senthilkumar
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றி சாதனை படைத்தது.போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் சன்ரைசர்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.அய்டன் மார்கரம் (20 ரன்கள்), நிதீஷ் ரெட்டி (13 ரன்கள்), கிளாசன் (16 ரன்கள்), ஷாபாஸ் அகமது (8 ரன்கள்) எடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். சன்ரைசர்ஸ் 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.பெண் சியர் லீடர்கள்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தியது.