காந்தி 150

மாணவர்களுக்கு காந்திஜி புத்திமதி

DIN

ஸ்ரீஎம்.எல். ஷா என்பவர் அகில இந்திய மாணவர் பெடரேஷனின் பொது காரியதரிசியாவார். நாகபுரியில் நடந்த மாணவர் மாநாட்டில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிளவு பற்றி காந்திஜிக்கு ஒரு கடிதமெழுதி யிருந்தார்.
இக்கடிதத்திற்கு, காந்திஜி எழுதியுள்ள பதிலில் பின்வருமாறு கூறுகிறார்:
இப்பொழுது நான் தேசத்தின் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களைப் போலவே இதில் மாணவர்களும் அடங்கியவர்களே.
ஆயினும், மாணவர்களிடம் எனக்கொரு விசேஷ சலுகையுண்டு. ஏனெனில் இன்னம் நான் என்னை ஒரு மாணவனாகவே கருதுகிறேன். இது மட்டுமல்ல. நான் இந்தியா வந்த காலம் முதல் மாணவர்களுடன் எனக்கு நெருங்கிய சம்பந்தமுண்டு. இவர்களில் அநேகர் சத்யாக்ரஹ இயக்கத்தில் சேவை புரிந்திருக்கிறார்கள். 
கட்சி அரசியலில் கலந்து கொள்வதென்பது மாணவர்களுக்கு கட்டி வராத விஷயமாகும். 
ஆனால் நீங்கள் அநேக விதமான புத்தகங்கள் படிக்கிறீர்களே அது போல, பல விதமான அரசியல் கட்சியினர் கூறுவதையெல்லாம் நீங்கள் கேட்கலாம். இப்படிக் கேட்டு இவர்கள் கூறுவதில் உள்ள உண்மையை கிரகித்துக் கொள்ள வேண்டும். மற்றவைகளையெல்லாம் தூரத் தள்ளிவிடவேண்டும். இந்த மனப்பான்மை தான் மாணவர்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு வழியாகும்.
அதிகார வேட்டை அரசியல் விஷயமே மாணவர்கள் உலகத்தில் இருக்கக்கூடாது. எப்போது நீங்கள் இந்த மாதிரி வேலைகளில் இறங்கினீர்களோ உடனே நீங்கள் மாணவர் என்ற ஸ்தானத்தை இழக்கின்றீர்கள். ஆதலால், நீங்கள் தேசத்தின் நெருக்கடியான காலத்தில் சேவை செய்யத் தவறிவிடுவீர்கள். ஆதலால், மாணவர் சங்கத்தின் பொது காரியதரிசியான நீங்கள் அதிகார வேட்டை அரசியலில் இறங்கினீர்களோ அது மாணவர் இயக்கத்திற்கு நல்ல சேவை செய்ததாகாது.

தினமணி (26-01-1941)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT