காந்தி 150

சொந்த பலத்தையே பிரஜைகள் நம்ப வேண்டும்

DIN

திருவாங்கூரில் பல இடங்களில் கையாளப்பட்டு வரும் பயங்கரமான அடக்குமுறைகளைப் பற்றி எனக்கு தந்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. எப்போதும் போல் இந்த விஷயத்தில் இரண்டு கக்ஷிகள் இருக்கின்றன. ஆகவே, பக்ஷபாதமற்ற ஒரு விசாரணை நடத்துவதற்கு பலமான காரணங்கள் இருக்கின்றன.
 விசாரணை நடந்தாலும், நடக்காவிட்டாலும் திருவாங்கூர் சமஸ்தான காங்கிரஸின் கடமை தெளிவாயிருக்கிறது.
 அவர்களோ, அவர்களை ஆதரிப்பவர்களோ எந்த விதமான பலாத்காரத்திலும் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் திருவாங்கூர் சர்க்கார் பணிபுரியும்வரையில் அல்லது காங்கிரஸ் மெம்பர் ஒருவராவது பாக்கி இருக்கும்வரையில் சத்யாக்ரஹப் போராட்டத்தை நடத்திக்கொண்டு போக வேண்டும்.
 இந்த சந்தர்ப்பத்தில் அஹிம்ஸா கொள்கையிலுள்ள ஒரு கட்டுப்பாட்டை தெரிவிக்க விரும்புகிறேன். தவறு செய்பவர், தன் தவறுக்கு பலியாகுபவரின் அஹிம்ஸா கொள்கையை உபயோகித்துக் கொண்டு, கடைசி ஆள் நசுக்கப்படும் வரையில், தவறின் மேல் தவறாக அடுக்கிக்கொண்டே போனால், பக்கத்திலுள்ள இடங்களிலிருந்து ஒரு கூச்சல் கிளம்பும். பொதுஜன அபிப்ராயத்தின் வலிமையோ அல்லது அதைப் போன்றவைகளோ தவறு செய்பவரை தோற்கடித்துவிடும்.
 என்ன நடந்தபோதிலும் தங்கள் சொந்த பலத்தின் மூலம் தான் விமோசனம் என்பதை சமஸ்தானப் பிரஜைகள் உணரட்டும். இப்போதுள்ளவர்கள் பூர்ண அஹிம்ûஸயையும், சத்யத்தையும் செய்கையில் நடத்திக் காட்டுவதைத்தான் பின்னால் வரும் சந்ததிகள் நம்பியிருக்கிறார்கள். நாம் வெகு காலமாக ஆயுதங்களில்லாமல் இருந்திருக்கிறோம்; சமாதானமான முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வந்திருக்கிறோம். ஆகவே, ஜனங்களை பகிரங்கமான பலாத்கார முறைகளில் சேர்ப்பது எவ்வளவு அசாத்தியமென்று அவர்கள் உணர வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT