காந்தி 150

இயற்கைக்கு முரணான பிரிவினை கூடாது

DIN

ஸ்ரீ. ஜின்னா தமக்கு சுதந்திரத்தில் அதிக அக்கறை உண்டென்று சொல்கிறார். ஆனால் அவருக்கு பாகிஸ்தானை அடைவதில் உள்ள ஆர்வம் சுதந்திரத்தில் இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை.
ஸ்ரீ. ஜின்னாவின் மனோபாவம் பற்றி மகாத்மா காந்தி லண்டன் கிரானிக்கிள் நிருபருக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறினார்.
மகாத்மா காந்தி மேலும் கூறியதாவது:
இரண்டு தேச அடிப்படையை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஸ்ரீ. ஜின்னாவின் கோரிக்கை அதுதான். வடமேற்கு எல்லைப்புற மாகாணம், சிந்து, பஞ்சாப், நிஜாம், வங்காளம், அஸ்ஸாம் ஆகியவைகளை பாகிஸ்தான் சுதந்திர ராஜ்யமாக உடனே அங்கீகாரம் செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். இந்தியாவிலிருந்து மேற்சொன்ன பிரதேசங்களை துண்டாக வெட்டிவிட வேண்டுமென்று ஸ்ரீ ஜின்னா விரும்புகிறார். அந்த பிரதேசங்களில் உள்ள மக்களின் அபிப்ராயம் இன்னதென்பதை சர்வஜன வோட்டு மூலம் அறியாமல் இவ்விதம் செய்யவேண்டுமென்கிறார்.
பாகிஸ்தானை ஸ்ரீ. ஜின்னா மனப்பூர்வமாக கோருகிறார் என்று நான் நம்புகிறேன் என்பதை முதலில் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஆனால் இந்தியாவை இயற்கைக்கு முரணான வகையில் வெட்டினால் அது சம்பந்தப்பட்ட மக்களுக்கு இன்பத்தையோ அல்லது சுபிட்சத்தையோ கொண்டுவந்து விடுமென்று அவர் நினைப்பது வீண் மனப்பிரமை என்று நான் நினைக்கிறேன். 
மத வேறுபாடு ஒருபுறமிருக்க, ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே இனத்திலிருந்து உதித்தவர்கள். அனைவரும் இந்தியர்களே.
துரதிருஷ்டவசமாக ஜின்னாவிற்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. தனித்தனியான தேசங்கள் என்ற கொள்கையை நான் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று அவர் வற்புறுத்தினார்.

தினமணி (01-10-1944)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி - மதுரை புதன்கிழமை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் மே 13-இல் தொடக்கம்

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

SCROLL FOR NEXT