22.4.1976: ஒரு கல்யாணத்தில் மொத்தம் 200 பேருக்கு தான் சாப்பாடு
ஒரு கல்யாணத்தில் மொத்தம் 200 பேருக்கு தான் சாப்பாடு...
சென்னை, ஏப். 21- திருமணம், ஈமச் சடங்குகளின் போது அதிகபட்சம் 200 பேர்களுக்குத்தான் சாப்பாடு போட வேண்டும் என்ற உத்தரவு இந்த சடங்குகள் முழுவதற்கும் சேர்த்துத்தான்; தனித் தனியாக அல்ல என்று இன்று வெளியான அரசு உத்தரவு ஒன்றில் தெளிவாக்கப்படுகிறது.
ஏப். 6 ஆம் தேதி விருந்தினர் கட்டுப்பாடு உத்தரவு ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்குமா அல்லது சடங்குகள் நடக்கும் ஒரு நாளில் போடப்படும் சாப்பாடுகள் முழுவதற்குமா என்று சிலர் விளக்கம் கேட்டதால் அரசு இந்த விளக்கம் தந்துள்ளது. ...
... அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் கோர்ட்டுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும், 5 ஆண்டுவரை சிறைத்தண்டனை அதிகபட்ச தண்டனையாயிருக்கும் என்றும் கூறப்பட்டது. சட்டத்தில் அபராதத்துக்கு எல்லை குறிப்பிடப்படவில்லையாதலால் விசாரணை செய்யும் மாஜிஸ்டிரேட்டுகளின் யுக்தானுசாரப்படி அபராதம் விதிக்கப்படும்.
Advertisement
Advertisement
இந்தியாவின் அடுத்த செயற்கைகோள் 1978-ல் ஏவப்படும்
மாஸ்கோ, ஏப். 20 - 1978-ம் ஆண்டில் ரஷியாவில் உள்ள ஓர் ஏவுதளத்திலிருந்து இந்தியாவின் இரண்டாவது செயற்கைக்கோள் விண்வெளியில் சுற்றி வருவதற்காக ஏவப்படும்.
ரஷிய செய்தி ஸ்தாபனமாகிய 'டாஸ்" இதைத் தெரிவித்தது.
தற்போது இங்கு ரஷிய நிபுணர்களும் இத்திட்டத்திற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் அது கூறியது.
April 22, 1976: At a wedding, food was provided for a total of only 200 people.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.