முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

14.2.1976: சென்னையில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு - தமிழ்நாட்டில் அவர் 3 நாட்கள் தங்குகிறார்

சென்னையில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது பற்றி...

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:30 PM
14.2.1976
பகிர்:

சென்னை, பிப். 13 - பிரதமர் இந்திரா காந்தி இன்று பிற்பகலில் பெங்களூரிலிருந்து ஒரு விசேஷ ஐ.ஏ.எப். விமானத்தில் சென்னைக்கு வந்தார். அவருக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அவர் மூன்று நாட்கள் தங்குவார்.

அவர் விமானத்திலிருந்து வெளியே வந்த போது "இந்திரா காந்தி வாழ்க" இந்திரா காந்தி நீடூழிவாழ்க" என்ற கோஷங்கள் முழங்கின. பிரதமருடன் அவருடைய புதல்வர் ராஜிவ் காந்தியும், திருமதி சோனியா காந்தியும் அவர்களுடைய இரு குழந்தைகளும் வந்தனர்.

திருமதி இந்திரா காந்தி விமானத்திலிருந்து இறங்கியதும் கவர்னர் கே.கே. ஷா, திருமதி மதுபென்ஷா, தவே, ஆர்.வி. சுப்ரமணியம் ஆகிய கவர்னரின் இரு ஆலோசகர்கள், பிரதம காரியதரிசி சபாநாயகம் முதலியோர் அவரை வரவேற்றனர்.

அகில இந்திய புது காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி மரகதம் சந்திரசேகர், கே.எஸ். ராமசாமி, மகாதேவன் பிள்ளை, ராஜாராம் நாயுடு, திண்டிவனம் ராமமூர்த்தி, என்.எஸ்.எஸ். மன்றாடியார், சம்பத் உட்பட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் பிரதமருக்கு மாலையணிவித்தனர். ...

... இணைப்பு பற்றி மகிழ்ச்சி

தமிழ் நாட்டில் இரு காங்கிரஸ் கட்சிகளும் இணைந்தது பற்றி பிரதமர் இந்திரா காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் சிறிது நேரம் பேசுகையில், இணைப்பு ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று கூறினார்.

இணைப்பு ஏற்பட்டுவிட்டால், அது பற்றி உங்கள் கருத்தென்ன என்று அவரிடம் கேட்கப்பட்டது. பொது நோக்கத்துக்காக நாம் உழைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மாலை 3-50க்கு பிரதமர் ஐ.ஏ.எப். ஹெலிகாப்டர் ஒன்றில் மாமல்லபுரத்துக்குப் புறப்பட்டார்.

பெற்ற குழந்தையை விற்ற தாய்; திரும்ப வாங்க திருடினாள்!

ஹூஸ்டன், பிப்: 13 - பணமுடைக்காக, பெற்ற குழந்தையை விலைக்குவிற்ற இளம் தாய் ஒருத்தி அந்தக் குழந்தையை மீண்டும் வாங்கிக் கொள்வதற்காக பல இடங்களில் திருடியதாக கூறினாள்.

ஹூஸ்டன் என்ற அமெரிக்க நகரில் இது நடந்தது.

அவள் பெயர் ஆல்டன், வயது 19. அவள் கணவன் பெயர் ரே மார்டினெஸ், வயது 21.

சென்ற ஞாயிறன்று கணவன் மனைவி இருவரும், மற்றொரு தம்பதிகளுடன் கைது செய்யப்பட்டனர். ஹூஸ்டன் பகுதியில் நடைபெற்ற பல களவுகள் சம்பந்தமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பணம் தேவைப்பட்டதால், தனது 18 மாதக் குழந்தையை 1,600 டாலருக்கு விற்றுவிட்டதாக ஆல்டன் கூறினாள். குழந்தையை விற்ற விஷயத்தை சுமார் 2 வார காலம் கணவனுக்கு தெரிவிக்கவில்லையாம். அதற்குப் பிறகே குழந்தையை திரும்ப வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்தேன் என்கிறாள். ...

summary

14.2.1976: Prime Minister receives a rousing welcome in Chennai - He stays in Tamil Nadu for 3 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.