சென்னை, ஜன. 17 - சுத்தத் தங்கம் (10 கிராம்) விலை ரூ. 559.00
நகைத் தங்கம் (22 காரட்) (1 கிராம்) சில்லறை விலை ரூ. 53.00
வெள்ளி (1 கிலோ) விலை ரூ. 1145.00
சில்லறை விலை (10 கிராம்) ரூ. 11.55
உள்ளூர் வெள்ளி 1 கிலோ விலை ரூ. 1070.00 ...
... பம்பாய் மார்க்கெட்
பம்பாய், ஜன. 17 - தங்கம் (10 கிராம்) விலை ரூ. 546.00
வெள்ளி (1 கிலோ) விலை: ரூ. 1110.00
மதுரை தங்கம், வெள்ளி
மதுரை, ஜன. 17 - ஆபரணத் தங்கம் 1 கிராம் (22 காரட்) ரூ. 50.00
ரெடிமேட் வெள்ளி (10 கிராம்) ரூ. 12.00
பம்பாய், ஜன. 15 - அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்திய ஜனத்தொகை 10 சதவிகிதம் அதிகரிக்கும். 1975 நடுவில் 59 கோடியே 78 லட்சத்து 7 ஆயிரமாக இருந்த ஜனத்தொகை 1981 நடுவில் 66 கோடியே 13 லட்சத்து 8 ஆயிரமாகிவிடும் என ரிசர்வ் பாங்கின் செலாவணி - நிதி அறிக்கையொன்று மதிப்பிடுகிறது.
1961ல் இந்திய ஜனத்தொகை 44 கோடியே 23 லட்சத்து 7 ஆயிரம் அப்போதுள்ளதுடன் ஒப்பிட்டால் 1981ல் -20 ஆண்டில்- இந்திய ஜனத்தொகை சுமார் 50 சதவிகிதம் அதிகரிப்பதாகிறது.
1975 நடுவிலுள்ள நிலைமைப்படி மாநில வாரியாக ஜனத்தொகையில் முதலிடம் உ.பி. பெறுகிறது (9.478 கோடி). அதன்பிறகு இறங்கு வரிசையில் பீகார் (6.08 கோடி), மேற்கு வங்கம் (4.87 கோடி) வருகின்றன. எல்லாவற்றிலும் குறைவான ஜனத்தொகையுள்ள மாநிலம் நாகாலாந்து (11 லட்சம்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.