சென்னை, ஜன. 19 - தி.மு.க. மந்திரிசபையின் பதவிக்காலத்தை நீடிப்பதா, அன்றி கூடாதா என்பது குறித்து மத்திய சர்க்கார் இதுவரை முடிவு எதையும் எடுக்கவில்லை என்று யூனியன் உள்துறை மந்திரி பிரம்மானந்த ரெட்டி இன்று இங்கு தெரிவித்தார்.
ராஜ்பவனில் நிருபர்களிடையே அவர் பேசுகையில், அவசியம் ஏற்படும்போது மத்திய சர்க்கார் முடிவு எடுக்கும் என்று அவர் சொன்னார்.
மாநில அரசு பதவிக்காலத்தை நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது அமைச்சகத்துக்கு தந்திகள் வந்திருப்பதாக பிரம்மானந்த ரெட்டி குறிப்பிட்டார்.
அவருக்கு வந்த தந்திகளின் எண்ணிக்கை குறித்து கேட்டதற்கு, தந்திகளை யாரும் எண்ணவில்லை என்றும், பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஆதரவாகவும், எதிர்த்தும் தந்திகள் வரும் என்றும் அவர் சொன்னார்.
மாநில அரசின் நீடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கு அதிகமான தந்திகளை சேலத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்கள் அனுப்பியிருப்பதாக உள்துறை மந்திரிக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு காங்கிரஸ்காரர் கூறினார்.
காலத்தையும், நிலைமையையும் பரிசீலித்து மத்திய சர்க்கார் முடிவு எடுக்கும் என்று உள்துறை மந்திரி குறிப்பிட்டார். ...
... அடுத்த கவர்னர் யார்?
கே.கே. ஷாவுக்குப் பின் தமிழ்நாட்டின் அடுத்த கவர்னர் யார் என்பது பற்றி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று பிரம்மானந்த ரெட்டி கூறினார். புது கவர்னர் பற்றிய நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். கே.கே. ஷா பதவிக்காலம் மே மாதம் முடிகிறது.
தியாகராஜரின் ஆராதனை விழாவைத் துவக்கிவைக்க பிரம்மானந்தரெட்டி தஞ்சை சென்றார்.
புதுடில்லி, ஜன. 20 - அன்னியச் செலாவணி மோசடிக்காரர்கள், கள்ளக்கடத்தல்காரர்கள் ஆகியோர் சட்டவிரோதமான முறையில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரமளிக்கும் மசோதா இன்று லோக்சபையில் நிறைவேறியது.
கள்ளக்கடத்தல்காரர், வெளிச் செலாவணி மோசடி செய்வோர் (சொத்து பறிமுதல்) மசோதாவை தாக்கல் செய்து பாங்கிங் ரெவின்யூ மந்திரி திரு. பிரனாப் குமார் முகர்ஜி பேசினார். சிறு குற்றமிழைத்தவர்கள் தண்டனைகுள்ளாக மாட்டார்கள் அதேநேரத்தில் தொடர்ந்து குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியாது என்றார் மந்திரி. இந்த மசோதா சட்டமானவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
3 மணிநேர விவாதத்தில் மெம்பர்கள் எழுப்பிய பலவித சந்தேகங்களுக்கு மந்திரி பதிலளித்தார். சில மாதங்களுக்கு முன்னமேயே இம்மசோதா பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டதால் மசோதாவின் நோக்கங்கள் நிறைவேறாமல் போகலாம் என்ற கருத்தை மந்திரி ஏற்கவில்லை. “கூட்டாளிகள்” என்ற வார்த்தை மசோதாவில் உள்ளதால் ஒன்றுமறியாத குற்றமற்றவர்களும் பாதிக்கப்படலாம் என்று ஒரு மெம்பர் கூறியதை மந்திரி குறிப்பிட்டு அந்த சாத்தியமுள்ளது உண்மைதான் என்றும் கடத்தல் மன்னர்கள் பின்னணியில் இருந்துகொண்டு பலர் மூலம் செயல்படுவதால் அவர்களை சட்டத்திற்கு வெளியே வைத்திருக்க அரசு விரும்பவில்லை என்றும் அப்படிச் செய்தால் மசோதாவின் நோக்கம் தோல்வியுறும் என்றும் மந்திரி கூறினார். ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.