முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

8.3.1976: ராஷ்டிரபதி ஆட்சிக்குப் பின் த.நா.வில் விலைவாசிகள் இறங்கிவிட்டதாக கவர்னர் தகவல்

ராஷ்டிரபதி ஆட்சிக்குப் பின் த.நா.வில் விலைவாசிகள் இறங்கிவிட்டதாக கவர்னர் தகவல்...

Updated On : 7 மார்ச், 2026 at 10:30 PM
8.3.1976
பகிர்:

புது டில்லி, மார்ச். 7- தமிழ்நாட்டில் ராஷ்டிரபதி ஆட்சி பிராகடனம் செய்யப்பட்ட பின்பு விலைவாசிகள் இறங்கிவிட்டன; பொருள்களின் கையிருப்பு அதிகமாகியது; அநீதிகள் அகற்றப்பட்டன; வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் மக்கள் புத்துணர்ச்சி காட்டி வருகிறார்கள் என்று தமிழ்நாடு கவர்னர் கே.கே. ஷாஇன்று இங்கு கூறினார்.

"யுவ பாரத்" என்ற இளைஞர் சஞ்சிகை ஏற்பாடு செய்த ஒரு விழாவில் கவர்னர் பேசினார்.

"இந்த நடவடிக்கை ஏன் முன்பே எடுக்கப்படவில்லை? என்ற கேள்விக்கு கவர்னர் பதிலளித்தார்.

சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட அரசாங்கம் எதற்குமே அதனுடைய தகுதியை அது நிரூபிப்பதற்கு முழு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டைப் பொருத்தவரை மத் திய அரசாங்கம் போதிய அளவு தாராளத்துடன் நடந்து கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீளமான கயிறு அளிக்கப் பெற்றது. உண்மையில் இந்திரா காந்தியின் பெயரை வைத்துத்தான் திராவிட முன்னேற்றக் கழகமே பதவிக்கு வந்தது, என்று கவர்னர் கூறினார்.

வீராணம் திட்டம் ரூ. 31 கோடி திட்டம்; அது 1974ல் முடிவடைந்திருக்க வேண்டியது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் அதன் கால்வாயிதாவை நீடித்தது மறுபடியும் நீடித்தது. இத் திட்டம் பற்றி அக்கௌண்டன்ட் ஜெனரல் ஆட்சேபணைகள் தெரிவித்து அறிக்கை அளித்தார். என்று கவர்னர் கூறினார். ஆனால் அந்த அறிக்கை தமக்குக் கூட காட்டப்படவில்லை என்றும், அறிக்கை அவ்வாறு இருந்தும் கால வாய்தா நீடிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் சொன்னார்.

"நான் ஒரு மத்திய அரசாங்க 'ஊழியன்'. நான் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. ஆனாலும் நாட்டில் உள்ள நிலவரத்தைப் பார்க்க முடியாது என்று 'நான் கண்ணை மூடிக் கொண்டு இருந்துவிட முடியாது" என்றார் அவர்.

1976 - 77ல் மின் திட்டங்களுக்கு ரூ. 1440 கோடி முதலீடு

புது டில்லி, மார்ச். 7 - கூடுதலாக 25 லட்சம் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதாலும், மின்மண்டல இணைப்புகள் மேலும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படும் என்பதாலும் 1976-77-ம் ஆண்டில் மின்சார நிலைமை மேலும் அபிவிருத்தி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டில் மின்சாரத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ. 1440 கோடி முதலீடு செய்யப்படும். இது 1975-76-ம் ஆண்டு முதலீடான ரூ. 1101 கோடியை விட 31 சதவிகிதம் அதிகம்.

திட்ட மந்திரி ஐ.கே. குஜ்ரால் நேற்றிரவு இங்கு இந்திய பம்ப் உற்பத்தியாளர் சங்க வெள்ளி விழாக் கூட்டத்தில் உரையாற்று கையில் இத்தகவலகளைத் தெரிவித்தார்.

கிராமப்புறங்களுக்கு மின்சார் வசதி அளிக்கும் திட்டத்தின் கீழ் பிரதானமாக பாசன பம்பு செட்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படும்; பின்தங்கிய பகுதிகள், மலைப் பிராந்தியங்கள், பாலை வனப் பகுதிகள், மலைஜாதியினர் வாழும் வட்டாரங்கள் ஆகியவற்றுக்குக் குறைந்த வட்டியில் கடனளிப்பதில் கிராமப்புற மின் வசதிக் கார்ப்பரேஷன் முதலிடம் அளிக்கும் என்றும் மந்திரி குஜ்ரால் சொன்னார்.

1976-77-ம் ஆண்டில் மேலும் 18 லட்சம் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு அளிக்கப்படும்.

20 ஆயிரம் கிராமங்களுக்கு மின் வசதி அளிக்கப்படும் என்றும் மந்திரி தெரிவிக்கார்.

summary

8.3.1976: Governor reports that prices in the country have come down after the Rashtrapati regime.

முழு கட்டுரையைப் படிக்க →