முகப்பு
மருத்துவம்

மூட்டு தேய்மானம்: நவீன சிகிச்சை நிவாரணம் தரும்

முழங்கால் மூட்டு பாதிக்கப்படுவதாலும், முதுமை காரணமாகவும்

Updated On : 13 அக்டோபர், 2012 at 4:16 AM
பகிர்:

முழங்கால் மூட்டு பாதிக்கப்படுவதாலும், முதுமை காரணமாகவும் "ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ்' (மூட்டு எலும்பு இணைப்பு அழற்சி நோய்) பிரச்னை

ஏற்படுகிறது.

மென் எலும்பு சிதைதல்: மூட்டில் உள்ள மென் எலும்பு "கார்டிலெஜ்' சிதைதலும், எலும்புகளின் முடிவில் புதிய குறுத்தெலும்பு வளர்ந்தும் காணப்படும். கார்டிலேஜ் எனும் மென் எலும்பும், சினோவியல் திரவமும் சேர்ந்து இரண்டு எலும்புகளுக்கும் இடையில் வழுக்கும் தன்மையைத் தருகிறது. கார்டிலேஜ் எலும்பு தேய்வடையும் போது மூட்டுவலியும், க்ளக் என்ற சத்தமும் கேட்கும். இந்நிலை நீடிக்கும் போது மூட்டுவலி அதிகமாவதால் நடக்க முடியாமல் போய்விடும்.

Advertisement

நவீன சிகிச்சை என்ன? பொதுவாக மூட்டு எலும்புகள் இடுப்பு, கை, கால், கழுத்து, விரல்கள், கட்டை விரல்கள், கால் முட்டி எலும்புகள் பாதிக்கப்படும். எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை தேவைப்பட்டால் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் பாதிப்பின் தன்மையைக் கண்டறியலாம்.  பின்னர் மருந்துகள் கொடுத்து குணப்படுத்தலாம். எனினும் இப்போது புதிய எமிட்ரான் என்ற டநப சிகிச்சை மூலம் பல விதமான எலும்புத் தேய்மான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.

  இந்த உபகரணம், குறைந்த நுண் அலைகள் மூலம் (உப்ங்ஸ்ரீற்ழ்ர் ஙஹஞ்ய்ங்ற்ண்ஸ்ரீ ஊண்ங்ப்க்) பாதிக்கப்பட்ட இடத்தை மென்மையாக அதிர்வடையச் செய்து சிகிச்சை அளிக்கிறது. கார்டிலேஜ் மற்றும் சில திசுக்கள் நம் உடலில் உள்ள அனைத்து எலும்புகளையும் பாதுகாத்து வேலை செய்ய உதவுகிறது. அதிகப்படியான பயன்பாட்டின் காரணமாக இவை பாதிக்கப்படுகின்றன. இவை பாதிக்கப்படும் ஆரம்ப நிலையிலேயே ஒருவித எலக்ட்ரோமேகனடிக் நுண் அலைகளை உருவாக்கி தசைகளும் நுண் எலும்புகளும் பாதிக்கப்பட்டிருப்பதை நமக்கு அறிவுறுத்தும். கவனிக்காமல் போகும்பட்சத்தில் அதிக வலியும், மூட்டு பாதிகப்பட்டு வேலை செய்ய முடியாத நிலைக்கு போய்விடும்.

  எமிட்ரான் டநப சிகிச்சை இயற்கை நுண் அலைகளை செயற்கையாக தூண்டி எலும்பு மற்றும் தசைகளை பழுது பார்க்க உதவுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான ஆர்த்தரைட்டிஸ் நோயாளிகள் பயனடைந்து இயல்பு வாழ்க்கை வாழ முடிகிறது.

 சென்னை ஆக்ஸிமெட் மருத்துவமனையில் இந்த எமிட்ரான் சிகிச்சையை அறிமுகப்படுத்தி, கடந்த 3 வருடங்களாக சுமார் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகளின் ஆர்த்ரைட்டிஸ் நோய்க்கு 70-80% நிவாரணம் அளித்து வருகின்றனர்.

  இங்கு 15 நாட்கள் தினமும் 1 மணி நேரம் எமிட்ரான் சிகிச்சையும் மேலும் 2 மணி நேரம் மற்ற சிகிச்சைகளும் வலி இல்லாமல் தங்கும் அவதியில்லாமல் அளித்து தீர்வளிக்கிறார்கள்.

ஆக்ஸிமெட் மருத்துவமனையின் தலைமை மருத்துவரான டாக்டர் அயாஸ் அக்பர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஆக்ஸிமெட் சிகிச்சை பற்றிய ஈயஈ-யை வெளியிட்டு சிறந்த சிகிச்சை அளித்து வருவதற்காக பிரதமரின் பாராட்டை பெற்றுள்ளார்.

முதுமை, அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள், வேறு சில மருத்துவ பிரச்னைகளால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியாதவர்கள் ஆகியோர் ஆக்ஸிமெட்டின் ஊசி துளைக்காத எமிட்ரான் சிகிச்சையைப் பெற்று நிவாரணம் பெறலாம்.

  மேலும் உலக மூட்டு அழற்சி தினத்தை முன்னிட்டு ஆக்ஸிமெட் மருத்துவமனை, ஆர்த்ரைட்டிஸ் நோய்க்கான பரிசோதனைகளை 50 சதவீத சலுகையுடன் வழங்குகிறது. இந்தச் சலுகையைப் பயன்படுத்த விரும்புபவர்கள் முன்கூட்டியே தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்புக்கு: 044-42131010, 044-42131014.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.